Sunday, 26 March 2017

ஆய கலைகள் 64

ஆய கலைகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கற்க வேண்டிய கலைகளாக பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.


'அறுபத்துநாலு கலை' என்னும் பெயர் தமிழாதலாலும், அறுபத்துநாலாக வகுக்கப்பட்ட கலைகள் அனைத்தும் தமிழர்க்கும் உரியனவாதலாலும், தமிழ்க்கலைகள் ஆரியக் கலைகட்குக் காலத்தால் முந்தியனவாதலாலும், அறுபத்துநாலு கலைப்படி இங்குத் தரப்பட்டுள்ளது.

  1. அக்கர இலக்கணம் - எழுத்திலக்கணம்
  2. லிகிதம் (இலிகிதம்) - எழுத்தாற்றல்
  3. கணிதம் - கணிதவியல்
  4. வேதம் - மறை நூல்
  5. புராணம் - தொன்மம்
  6. வியாகரணம் - இலக்கணவியல்
  7. நீதி சாஸ்திரம் - நய நூல்
  8. சோதிடம் - கணியக் கலை
  9. தரும சாஸ்திரம் - அறத்து பால்
  10. யோகம் - ஓகக் கலை
  11. மந்திரம் - மந்திரக் கலை
  12. சகுனம் - நிமித்தக் கலை
  13. சிற்பம் - கம்மியக் கலை
  14. வைத்தியம் - மருத்துவக் கலை
  15. உருவ சாஸ்திரம் - உருப்பமைவு
  16. இதிகாசம் - மறவனப்பு
  17. காவியம் - வனப்பு
  18. அலங்காரம் - அணி இயல்
  19. மதுர பாடனம்           இனிது மொழிதல்
  20. நாடகம் - நாடகக் கலை
  21. நிருத்தம் - ஆடற் கலை
  22. சத்த பிரமம் - ஒலிநுட்ப அறிவு
  23. வீணை - யாழ் இயல்
  24. வேனு - குழலிசை
  25. மிருதங்கம் - மத்தள நூல்
  26. தாளம் - தாள இயல்
  27. அகத்திர பரீட்சை - வில்லாற்றல்
  28. கனக பரீட்சை - பொன் நோட்டம்
  29. இரத பரீட்சை - தேர் பயிற்சி
  30. கஜ பரீட்சை - யானையேற்றம்
  31. அசுவ பரீட்சை - குதிரையேற்றம்
  32. இரத்தின பரீட்சை - மணி நோட்டம்
  33. பூ பரீட்சை - மண்ணியல்
  34. சங்கிராம இலக்கணம் - போர்ப் பயிற்சி
  35. மல்யுத்தம் - கைகலப்பு
  36. ஆகர்ஷணம் - கவிர்ச்சியல்
  37. உச்சாடணம் - ஓட்டுகை
  38. வித்து வேஷணம் - நட்பு பிரிக்கை
  39. மதன சாஸ்திரம் - மயக்குக் கலை
  40. மோகனம் - புணருங் கலை (காம சாத்திரம்)
  41. வசீகரணம் - வசியக் கலை
  42. இரசவாதம் - இதளியக் கலை
  43. காந்தர்வ விவாதம் - இன்னிசைப் பயிற்சி
  44. பைபீல வாதம் - பிறவுயிர் மொழி
  45. தாது வாதம் - நாடிப் பயிற்சி
  46. கெளுத்துக வாதம் - மகிழுறுத்தம்
  47. காருடம் - கலுழம்
  48. நட்டம் - இழப்பறிகை
  49. முட்டி - மறைத்ததையறிதல்
  50. ஆகாய பிரவேசம் - வான்புகுதல்
  51. ஆகாய கமனம் - வான் செல்கை
  52. பரகாயப் பிரவேசம் - கூடுவிட்டு கூடுபாய்தல்
  53. அதிரிச்யம் - தன்னுறு கரத்தல்
  54. இந்திர ஜாலம் - மாயம்
  55. மகேந்திர ஜாலம் - பெருமாயம்
  56. அக்னி ஸ்தம்பம் - அழற் கட்டு
  57. ஜல ஸ்தம்பம் - நீர்க் கட்டு
  58. வாயு ஸ்தம்பம் - வளிக் கட்டு
  59. திட்டி ஸ்தம்பம் - கண் கட்டு
  60. வாக்கு ஸ்தம்பம் - நாவுக் கட்டு
  61. சுக்கில ஸ்தம்பம் - விந்துக் கட்டு
  62. கன்ன ஸ்தம்பம் - புதையற் கட்டு
  63. கட்க ஸ்தம்பம் - வாட் கட்டு
  64. அவத்தை பிரயோகம்சூனியம்

வேறொரு பட்டியல்:

  1. பாட்டு (கீதம்);
  2. இன்னியம் (வாத்தியம்);
  3. நடம் (நிருத்தம்);
  4. ஓவியம்;
  5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
  6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
  7. பூவமளியமைக்கை;
  8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
  9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
  10. படுக்கையமைக்கை;
  11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
  12. நீர்வாரி யடிக்கை;
  13. உள்வரி (வேடங்கொள்கை);
  14. மாலைதொடுக்கை;
  15. மாலை முதலியன் அணிகை;
  16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
  17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
  18. விரை கூட்டுகை;
  19. அணிகலன் புனைகை;
  20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
  21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
  22. கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
  23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
  24. தையல்வேலை;
  25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
  26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
  27. விடுகதை (பிரேளிகை);
  28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
  29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
  30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
  31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
  32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
  33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;
  34. கதிரில் நூல் சுற்றுகை;
  35.  மரவேலை;
  36. மனைநூல் (வாஸ்து வித்தை);
  37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
  38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
  39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
  40. தோட்டவேலை;
  41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
  42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
  43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
  44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
  45. மருமமொழி (ரகசிய பாஷை);
  46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
  47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
  48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
  49. பொறியமைக்கை;
  50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
  51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
  52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
  53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
  54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
  55. யாப்பறிவு;
  56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
  57. மாயக்கலை (சாலவித்தை);
  58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
  59. சூதாட்டம்;
  60. சொக்கட்டான்;
  61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
  62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
  63. படக்கலப் பயிற்சி;
  64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).

No comments:

Post a Comment

ஆய கலைகள் 64

ஆய கலைகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கற்க வேண்டிய கலைகளாக பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன . ' அறுபத்துநாலு கலை '...